தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 83 மனுக்கள் பெறப்பட்டு 61 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்.