சேலம் : காவல்துறை இயக்குனரின் உத்தரவின்படி, (03.12.2025) அன்று சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த பல்வேறு மனுக்கள் குறித்து நேரில் விசாரணை நடத்தி, தேவையான வழிமுறைகள் குறித்து உத்தரவுகளை வழங்கினார். பொது மக்களின் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்
















