சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தாங்கள் அளிக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று காலதாமதமின்றி தீர்வுகாணும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.தா.செந்தில்குமார் அவர்கள் புதிதாக பொதுமக்கள் குறைதீர்ப்பு திட்ட மென்பொருள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் தீர்வு காணப்பட்டு பொதுமக்களின் நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்தும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அதிகாரியின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மென்பொருளின் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து தகவலையும் எந்த நேரத்திலும் எளிதாகப் பெறும் வகையிலும் காகித பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையிலும், இந்த மென்பொருளானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக கொடுக்கப்பட்ட 2241 மனுக்களில் அவை அனைத்தும் விரைவாக தீர்வு காணப்பட்டுள்ளன.
மேலும் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 13326 மனுக்களில் 12760 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ள மனுக்கள் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,
வங்கி மற்றும் வங்கி தொடர்பான இணையவழி பணமோசடி பரிவர்த்தனையை உடனடியாக தடுக்க மற்றும் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரும் பயன்படுத்த இயலாதவாறு முடக்கி வைக்க 155 260 என்ற இலவச அழைப்பு என்னை உபயோகப்படுத்தி,
பொதுமக்கள் பயன் பெற்றுக் கொள்ளுமாறும் இணையதள மோசடி சமூகவலைத்தள வங்கி ஏடிஎம் குறித்த புகார்களுக்கு cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பயன்பெறுமாறு, காவல் கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்