சிவகங்கை : தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ், அவர்கள் உத்தரவுபேரில் ராமநாதபுரம் சகர காவல் துறை துணைத்தலைவர் திரு. துரை ஐ.பி.எஸ், அவர்கள் வழிகாட்டுதல் படி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ் அவர்கள், மேற்பார்வையில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஸ்டேட் பேங்க் வீதியில் தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணியலவில் பொது மக்களின் மனுக்கள் மீதான குறைதீர்ப்பு சிறப்பு முகாம் தேவகோட்டை உட்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது.
வேலாயுதப்பட்டினம் திருவேகபுத்தூர் ஆறாவயல் தாலுகா காவல் நிலையம் மற்றும் நகர் காவல் நிலையம் எல்லை உட்பட்ட பகுதி பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து 51 மனுக்கள் அளித்தனர். நடந்த சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் 51 மனுக்கள் பெறப்பட்டு
இதில் 48 மனுக்களுக்கு தீர்வு கண்டனர். இந்த சிறப்பு முகாமில் தேவகோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் இருந்து காவல் ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பெரும் மரியாதைக்குரிய அழகர் அவர்கள் காவல் சார்பு ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய மருது அவர்கள் மரியாதைக்குரிய ரெக்ஸ் அவர்கள் உள்ளிட்ட காவல் ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி