இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.01.2022) கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான கலவை பேருந்து நிலைய பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும்,
தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன்
முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு மற்றும் கலவை காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர்கரசி அவர்கள்.