பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நீதிராஜ் அவர்கள் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.கார்த்திகாயினி அவர்கள் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தை முன்னிட்டு பாடாலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரூர் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து திருச்சி சரகத்தில் செயல்பட்டு வரும் கேடயம் திட்டத்தின் கைபேசி எண்கள் 9384501999, 63830 71800 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலம், வளர்ச்சிக்கு முக்கியமான இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையின் அவசியம் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கொரோனோ நோய் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், குடும்ப வன்முறை, வரதட்சனை, பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு முககவசமும், கேடயம் திட்டம் தொடர்பான அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.