மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமார் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றியும், இடையூறுகள் ஏதும் இன்றியும் பொருட்கள் வாங்கிச் செல்வதற்கு வசதியாக DM கோர்ட் சந்திப்பு முதல் மறவர் சாவடி வரை உள்ள சிமெண்ட் ரோட்டில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்வதற்கு நேற்று 05.11.2020-ம் தேதி முதல் பார்க்கிங் வசதியினை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த பார்க்கிங் வசதியை பயன்படுத்திக் கொள்ளும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அனைத்து பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்