ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to காங்கயம் மெயின் ரோடு வெப்பி பிரிவு என்ற பஸ் நிறுத்தத்தில் (அந்த பிரிவு குறுக்கே பொது மக்கள் சாலையை கடந்து போகும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல பேர் இறந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சென்னிமலை காவல் துறை மற்றும் பெருந்துறை போக்கு வரத்து காவல் துறை சார்பில் பேரிக் காடு வைக்கபட்டு விபத்து கட்டுபடுத்தபட்டது. இந்த பேரிக்காடுகளை யாரோ சிலர் சாலை ஓரமாக அடிக்கடி நகர்த்தி வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் மீண்டும் விபத்து ஏற்பாடும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே பேரிக்காடுகளை முறைபடி வைத்து விபத்தை தவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்