திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, இந்தக் கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள், தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், குறைகளை கேட்டுக்கொண்டு உடனே துரித நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி. ஈஸ்வரன் அவர்கள், உடன் இருந்தார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்