திருநெல்வேலி : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவுரையின்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் புதன் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் அறிவித்திருந்தார். மேற்படி அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாதத்திற்கான பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் (17.08.2022)-ம் தேதி நாளை புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களின் முந்தைய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். எனவே பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.