இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். .திரு.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 18/01/2023 காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திருமதி.தீபா சத்யன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 24 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் திரு.கோட்டீஸ்வரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு பிரிவு) , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்..