பிரதி வாரம் புதன்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி(06.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இன்றைய குறைதீர்க்கும் கூட்டத்தில் 19 மனுதாரர்களிடம், அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்கள்.அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T. ஈஸ்வரன் அவர்கள் உடனிருந்தர்கள்.