சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.நரேந்திரன் நாயர், இ.கா.ப அவர்கள் மற்றும் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, அவர்கள் வழிகாட்டுதலின்பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அர்விந்த், இ.கா.ப, அவர்கள் தலைமையில் (20.12.2023) இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், கலந்து கொண்டனர். இன்று (20.12.2023) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் நிலுவையில் இருந்த 7 மனுக்களும், புதிதாக கொடுக்கப்பட்ட 33 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அலுவலகத்தில் தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி