வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப.,அவர்கள் தெரிவித்திருந்தார். இதன்படி (14.12.2022) -ம் தேதி இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., வேலூர் மாவட்ட அவர்களின் தலைமையில் நடைபெற்றது உடன் கூடுதல் கண்காணிப்பாளர், தலைமையிடம் திரு. பாஸ்கரன் அவர்கள் இருந்தார்.பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்