மதுரை : தமிழகம் முழுவதும் இருபதாம் தேதி முதல் இன்றிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் மதுரை மாநகரில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்பட்டது மக்கள் சார்பான ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இரண்டு நாட்களாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதம்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் குமார் சின்ஹா உத்தரவின்படியும் , அறிவுறுத்தலின் பேரிலும் காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் விளக்குத்தூண் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரானா வைரஸ்
தொற்று நோயிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இந்த மாதம் 8-ந்தேதி முதல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரப்படுகிறது . இதுவரை 19,328 நபர்களிடம் தலா ரூ .200 / – வீதம் மொத்தம் ரூ .38,65,600 / வசூல் செய்யப்பட்டுள்ளது .
இதன் காரணமாகவும் , மதுரை மாநகர் காவல் துறையினரின் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் , தற்போது மதுரை மாநகரில் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .
இதே போன்று முககவசம் அணிவித்தும் , சமூக இடைவெளியை பின்பற்றியும் கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் , வர்த்தகர்கள் , வாகன ஓட்டிகள் உட்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மதுரை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார். மேலும் , மாநகரில் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கின் போது கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளதாகவும்
எனவே , பொதுமக்கள் முழுமையாக ஊரடங்கு நேரங்களில் பொது இடங்களில் நடமாடாமல் தங்கள் வீடுகளில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார் .
அரசின் வழிகாட்டுதல் படி ஊரடங்கு அமலில் உள்ள நேரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கின் போதும் ஆம்புலன்ஸ் , பால் விநியோகம் , பத்திரிக்கை துறிையினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை துறையினருக்கு மட்டும் ஊரடங்கின் போது விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியின்போது, விளக்குத் தூண் காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு )ஆய்வாளர் ஜான்சிராணி , தெற்கு வாசல் காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு) ஆய்வாளர் வேதவள்ளி
உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி