திருவாரூர்: வலங்கைமான் பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய – மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, சிவராமபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் ஆதவன் @ மாதவன் (வயது-30). என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது முன்னதாக திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருப்பூர் மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, ஆயுதத்தை கொண்டு மிரட்டுதல், கொடுரமாக தாக்கியது உட்பட 14 வழக்குகள் உள்ளது. இந்நிலையில், மேற்படி நபர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி (20.08.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.