திருவாரூர்: திருவாரூர் நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாளநல்லூர் VAO அலுவலகம் அருகில் குற்றம் செய்யும் நோக்கத்துடன் அரிவாளோடு நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை மிரட்டி வந்த – மணவாளநல்லூர், கீழத்தெருவை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் கவியரசன் (வயது-21). என்பவரை ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திரு.ராஜ் அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து ஆயுதச்சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். முன்னதாக, இவர் மீது எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.
சிறப்பாக செயல்பட்டு அரிவாளை கொண்டு பொதுமக்களை மிரட்டிய நபரை கைது செய்த குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.