காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் இணைந்து மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புவனேஸ்வரி நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு படகு மூலம் சென்று தேங்கிய மழை நீரை விரைந்து அகற்றிடவும்,
நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதுடன் பொதுமக்களை படகு மூலம் மீட்டனர். மேலும், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு பால், பிரட், பிஸ்கட் மற்றும் பழங்களை வழங்கினார்கள்.
















