தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.01.2023), புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (01.01.2023) புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அய்யப்பன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. முருகப்பெருமாள், திரு. வெங்கடேஷ், திரு. நாகராஜன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.