மதுரை : மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகத்தில் உள்ள பெருங்குடி கிராமத்தில், திருமங்கலம் உட்கோட்ட DSP. திரு. வசந்தகுமார் அவர்கள் தலைமையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் திருமதி. பொன்மீனா மற்றும் போலீசார் மற்றும் பெருங்குடி SN கல்லூரி நிர்வாகம் மற்றும் NSS மாணவர்களுடன் இணைந்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு அளித்து, ஏதேனும் பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் ஆன்லைன் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள். மேலும், Cyber Crime தொடர்பான பிற குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள் என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி