திருநெல்வேலி: கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் திரு.ஐயப்பன் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும், அதைத் தடுக்கும் விதமாக முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்தும், அவசிய தேவைகள் இன்றி வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறும் எடுத்துரைத்து இலவசமாக முகக் கவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.