வேலூர்: பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி வினோதமான முறையில் மோசடி செய்யப்படுகிறது.
இதனால் செல் போனில் QR Code ஐ ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் மோசடியாளர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடுகிறது. இதை தடுக்கும் பொருட்டு கடை உரிமையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் தங்களுடைய வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுமாறு வேலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை அறிவுறுத்தப்படுகிறது