சென்னை: சென்னை வானிலை மண்டல அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள சென்னை¸ காஞ்சிபுரம்¸ செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர்¸ விழுப்புரம்¸ கள்ளக்குறிச்சி, வேலூர்¸ திருப்பத்தூர்¸ இராணிப்பேட்டை¸ திருவண்ணாமலை¸ சேலம் மற்றும் டெல்டா பகுதிகளில் மிக அதிக மழைக்கும் மற்றும் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே¸ பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும்¸ பாதுகாப்புடனும் இருக்கும் படி தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.