கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு. இரா. ஸ்டாலின் IPS .அவர்களின் உத்தரவின்படி, விபத்து முதலுதவி மற்றும் மாரடைப்பு உயிர் மீட்பு சுவாசம் (CPR) முதலுதவி பயிற்சி ஆயுதப்படையில் வைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதயம் தொடர்பான பிரச்சனையில் அதன் செயல்படுவது நின்று போகும்போது அல்லது செயல்படுவதில் தடை ஏற்படும்போது CPR எனப்படும் உயிர் மீட்பு சுவாசம் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும்
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தன்னிச்சையான இரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவ உதவி கிடைக்கும் வரை இதயத்தின் செயல்பாட்டை பாதுகாப்பதற்காக இது செய்யப்படுகிறது என்பது காவலர்களுக்கு விளக்கப்பட்டது.