சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 30 புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் பெறப்பட்ட புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து, விதிமுறைகளின் படி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆணையாளர் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, புகார்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த குறைதீர் முகாமின் போது, காவல் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















