திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.கார்த்திகேயன், முன்னிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் நல்ல முறையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் மகிழ்ச்சியோடு ஒன்றிணைந்து செயல்பட்டது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நல்ல முறையில் பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி