திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிரடி நடவடிக்கையால்
குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் ஊரை விட்டு வெளியே செல்கின்றனர். பழனி காவல் துணை கண்காணிப்பாளர். தனஜெயம் காவல் ஆய்வாளர்.மணிமாறன் சார்பு ஆய்வாளர்.விஜய் ஆகியோரது பெரும் முயற்ச்சியால் பழனி பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை உடனே நடவடிக்கை எடுப்பது மற்றும் இரவு நேரங்களில் தேவையற்றவர்கள் வெளியே சுற்றுவர்களை கட்டுப்படுத்துவதும், உள்ளூர் ரவுடி வெளியூர் ரவுடி யாராக இருந்தாலும் அவர்களை கட்டம் கட்டி தூக்குவதில் கில்லாடியாக திகழ்கிறார்கள்.
அதிவேகமாக செல்லும் பைக் ரேசர்களை பாரபட்சமின்றி வழக்குகள் பதிவ செய்வதும் கட்டப்பஞ்சாயத்து முறுக்கு மீசைகளை ஒடுக்குவதும், கந்து வட்டி மாபியாக்களை வழக்குகள் பதிவு செய்வதும் பள்ளி வளாகம் வெளியில் பைக்கில் சுற்றி தெரியும் ஹீரோக்களை வழக்குகள் பதிவு செய்து ஜீரோ ஆக்குவதும். இரவு நேரங்களில் ரோட்டில் மது பிரியர்கள் செய்யும் அட்டகாசத்தை முழுவதையும் ஒடுக்கி வருகின்றனர். தொடர்ந்து பழனி பகுதியில் சமூக வலைத்தளத்தில் போக்குவரத்து புகார்களை சரி செய்து தற்பொழுது ஒரு சில இடங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பொதுமக்களும் மகிழ்ச்சியாக சென்று வருகின்றனர். இவர்களை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஒரு சில அரசு அதிகாரிகள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.