இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய போலீசார் அங்குள்ள பொதுமக்களை அழைத்து கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முகக் கவசங்கள் அணிவதன் அவசியம் குறித்தும்,
பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.














