திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு திரையரங்கம் அருகே கூடியிருந்த தூய்மைக் பணியாளர்களை நிலைய ஆய்வாளர் திரு. சங்கரேஸ்வரன் அவர்கள் அழைத்து, சமூக இடைவெளியில் நிற்கச் செய்து, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், பொது இடத்திற்கு செல்லும் போது கட்டாயம் அனைவரும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என்பது பற்றியும், வெளியில் சென்று, வீடு திரும்பும் பொழுது கிருமிநாசினி தெளிப்பானை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா