திருவாரூர்: கடந்த 2017 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை ஜாம்புவானோடை,மதியழகன் வானக்கடையில் (பட்டாசு கடை) சட்டவிரோதமாக பட்டாசுகள்வைத்திருந்ததை காவல் துறையினர் கைப்பற்றி வழக்குபதிவு செய்தனர்.
அவ்வாறு கைப்பற்றப்பட்ட பட்டாசுகள் நீதிமன்ற உத்திரவுபடி இன்று (14.09.21) அழிக்கப்பட்டது. இதனை சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவுசெய்து வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பொது அமைதியை குலைக்கும் வகையில் whatsapp, facebook போன்ற வளைதளங்களில் அவதூறாக பரப்பி வருகின்றனர்.
அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு.சகாயம் செபஸ்திக்கண்ணு