தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (18.01.2025) தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் மற்றும் பழையகாயல் பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (18.01.2025) திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதி மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழையகாயல் கடற்கரை பகுதி ஆகிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.