திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட அரசிற்கான முன்வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தினை மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தினரும் மீஞ்சூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் திமுகவின் தற்போதைய பொதுக்குழு உறுப்பினருமான K.சுப்பிரமணி அவர்ககளும் பள்ளி நிர்வாகத்தினடம் வழங்கினார். மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் சார்பாக ரூ.1 லட்சமும் மீஞ்சூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் K.சுப்பிரமணி ரூ.1 லட்சமும் மேல்நிலை பள்ளியாக உயர்த்திட அரசின் முன்வைப்பு தொகைக்காக வழங்கப்பட்டது. இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக உயர்வு பெற்றால் மீஞ்சூர் சுற்றியுள்ள பல கிராம மாணவர்களுக்கு மேல் கல்வி பயில பெரும் உதவியாக இருக்கும்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு