கோவை: பொள்ளாச்சி ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் என்கிற கார்த்தி 26.மெக்கானிக் ஆன இவர் நேற்று காலை கோட்டூர் ரோடு பகுதியில் தனது பைக்கை நிறுத்தி வட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
மீண்டும் அவர் திரும்பி வந்த பொழுது இரண்டு வாலிபர்கள் அவரது பைக்கை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து நாகமணி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பைக்கை திருடி செல்ல முயன்ற இருவரை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பொள்ளாச்சி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி 19 மற்றும் சதாம் உசேன் 20 என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
                                











 
			 
		    

