கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பெண்ணும் குற்றவாளியும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், குற்றவாளி வாதியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து பதிவிறக்கம் செய்து அவருடைய பெயரிலேயே போலியான பேஸ்புக் பக்கத்தை தொடங்கி அவருடைய புகைப்படத்தை போட்டு அப்பெண் குறித்து ஆபாசமான வரிகளுடன் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்ததை பார்த்த பாதிக்கப்பட்ட பெண் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து வழக்குப் பதிந்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.