திருவள்ளூர் : தமிழ்நாடு முழுவதும் இன்று நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மூன்றாம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை பணியாளர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கும் சென்று வழங்கி ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனின் குறிப்பிட்டுள்ள நாட்களுக்கு தகுந்தாற்போல் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
அதன்படி ஒன்பதாம் தேதியான இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 8-வது வார்டு சூர்யா நகர் பகுதியில் மீஞ்சூர் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பாக 1536 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் கே சுப்பிரமணி. மீ.வி.கோதண்டன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் திமுக மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்ஸாண்டர். முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ். மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குமாரி புகழேந்தி, துரை வேல் பாண்டியன், ரஜினி, அபூபக்கர், சங்கீதா சேகர், கவிதா சங்கர், ஜோதிலட்சுமி மோகன், சுகன்யா, மோனிகா ராஜேஷ், மீஞ்சூர் திமுக பேரூர் கழகத் துணைச் செயலாளர் மோகன். ஜோதிஸ்ரீதர், சாமுவேல், ஆந்திரா ரமேஷ், நியாய விலை கடை அலுவலர் மஞ்சுளா, சீனிவாசன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு