திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2025-26 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிரம்மாண்ட எல்.ஈ.டி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பொதுமக்களுடன் இணைந்து பட்ஜெட்டை பார்த்து வருகின்றனர். உடன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நக்கீரன், சுகன்யா வெங்கடேசன், ஜோதிலட்சுமி மோகன், சங்கீதா சேகர், கவிதா சங்கர், பேரூராட்சி அன்பரசு, குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு