திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி ஏற்பாட்டை 13-வது வார்டு கவுன்சிலர் திருமதி. கவிதா சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். மீஞ்சூர் பேரூராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட பச்சையம்மன் கோவில் அருகே குளம் தூர் வாருவது பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இம்முகாமிற்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு அனைவரையும் வரவேற்றார். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது எனவும், தூய்மை நகரமாக பராமரிக்கும் வகையில் குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவோம் வேண்டுமென அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பச்சையம்மன் குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குமாரி புகழேந்தி ,சங்கீதா சேகர், ரஜினி, மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அப்பகுதி மகளிர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திரு. பாபு