திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டு பகுதியான அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி அங்கே குப்பைகள் கொட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று அரியன்வாயல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள், குடியிருப்பு நல சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகளை அரியன்வாயல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கொட்டுவதற்கு பதிலாக வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு