மதுரை : மதுரை அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடிப்பட்டியில் மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருப்பூர், கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம்,பழனி, திண்டுக்கல் ,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் வாடிப்பட்டி நகருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டில் சென்று விடுகின்றன இது குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த வேலையில் ஊருக்குள் வராத பேருந்துகள் குறித்து புகார் அளித்த நபர் மீது இருட்டில் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இதனால்ஆவேசமடைந்தபொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து ராஜா என்பவர் கூறும்போது, மதுரை ஆரப்பாளையத்தில் இருந்தும் திண்டுக்கல்லில் இருந்தும் வரும் பேருந்துகளில் வாடிப்பட்டி பயணியை ஏற்ற மறுக்கின்றனர். பைபாஸ் ரோட்டில் செல்வதாக தெரிவிக்கின்றனர். சில நடத்துனர்கள் வாடிப்பட்டி பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றினை சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வாடிப்பட்டி வழியாக செல்லும் பேருந்துகளை முறையான வழித்தடத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பெர்மிட் காலம் முடிந்த பின்பும் சில வாகனங்களை இயக்கி வருகின்றனர். இது குறித்தும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
வழக்கறிஞர் முத்துமணி கூறும் போது, திண்டுக்கல் மற்றும் மதுரை போன்ற இடங்களில் இருந்து வரும் அரசு விரைவு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் வாடிப்பட்டி நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம் குறிப்பாக இரவு நேரங்களில் தொலைதூரத்தில் இருந்து வரும் பெண்கள் குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் தற்போது விழா காலம் என்பதால் பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கு சென்று வருபவர்கள் இரவு நேரங்களில் வாடிப்பட்டி நகருக்குள் பஸ் வராததால் மதுரை சென்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது ஆகையால் இங்குள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி