திருவாரூர் : திருவாரூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பது விடுவதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம். எஸ். சி அவர்கள் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆகியோருடன் திருவாரூர் நகர் முழுவதும் நடந்து சென்று முழுமையாக ஆய்வு செய்து போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்தார். அப்போது திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்