திருவாரூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்கும் வகையில், மாநில பேரிடர் மீட்பு (SDRF) குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் 08 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களை உடனடியாக மீட்கும் வகையில் திருவாரூர் தலைமையிடத்தில்-03 மீட்பு குழுக்களும், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தலா-01 மீட்பு குழு வீதம் 05 மீட்பு குழுக்களும் (கூடுதல் 08 குழுக்கள்) அமைக்கப்பட்டு மாநில பேரிடர் மீட்பு (SDRF) குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு நியமிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரிசைப்படுத்திய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri) அவர்கள் (14.10.2024) நேரில் ஆய்வு செய்து மீட்பு குழுவினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக 9498100865 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.