திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களிலும் பேரிடர்களில் இருந்து எவ்வாறு மக்களை பாதுகாப்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
பழவேற்காடு அருகே உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் பழவேற்காடு ஏரியில் பொன்னேரி கோட்டாட்சியர் திரு.செல்வம்,வட்டாட்சியர் திரு.மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.சம்பத் தலைமையிலான தீயணைப்பு துறையினர் துணிச்சலுடன் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவது என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
தீ விபத்தில் இருந்தும் மழை வெள்ளம் மற்றும் ஆறு,ஏரிகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும் நடைபெற்ற தத்ரூபமான ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்தனர்.
மீன்வளத்துறை ஆய்வாளர் திரு.செல்வராஜ்,வருவாய் ஆய்வாளர். திரு நடராஜன், உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்