வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஸ் கண்ணன், இ. கா. ப. அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் (04.12.2022),-ம் தேதி பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. தேவபிரசாத், அவர்கள் மற்றும் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையிலான போலீசார் பேரணாம்பட்டு வி. கோட்டை சாலை என்ற இடத்தில் சோதனை செய்தபோது குற்றவாளி வல்லதாரசு த/பெ சண்முகம் வி. கோட்டை சாலை பேரணாம்பட்டு என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 10,000 மதிப்புள்ள Beer-26,old chef 180 ml – 07, 1848 Brandy 180 ml- 04 மொத்தம் 37 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்