வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் (24/11/2022),-ம் தேதி பேரணாம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் திரு.தேவ பிரசாத், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் பேரணாம்பட்டு அம்பேத்கர் நகரில் உள்ள குற்றவாளியின் வீட்டில் பின்புறம் சோதனை செய்தபோது குற்றவாளி சரத்குமார் என்பவர் விற்பனைக்கு செய்ய வைத்திருந்த சுமார் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்