சேலம் : நவ 07 – சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியில் தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் அருகில் தங்கி இருந்த குடோனில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது பேப்பர் மில்லில் இருந்து புகை வெளியாவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது அங்கு வந்த உரிமையாளர் குடோனில் தீ பற்றி எரிவதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலையடுத்து அங்கு வந்த சூரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீ கொழுந்து விட்டு எறிந்ததால் உள்ளே இருந்த பேப்பர் ரோல்கள் எறிந்ததில் அதிக அளவில் தீபிளம்பு உருவாகி கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதனால் தீயை அணைக்கும் பணி ஏற்பட்டது. பிறகு இயந்திரம் கொண்டு இடிந்து விழுந்த கட்டிட இடர்பாடுகளை அகற்றி எரிந்து கொண்டிருந்த பேப்பர் ரோல்கள் முற்றிலுமாக அணைக்கப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் குடோனில் வைக்கப்பட்டிருந்த மூன்று கோடி மதிப்புள்ள 40 டன் பேப்பர் ரோல்கள் , மின் மோட்டார்கள், மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தீ பற்றிய நேரம் அதிகாலை என்பதால் தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்