தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 17/05/2020 அன்று தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் “கொரோனாக்கு எதிரான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி Zoom Cloud என்ற செயலி மூலம் இணையம் வழியாக நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை பாராகட்டி தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS அவர்கள் நேற்று 23/05/2020 தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் அவர்கள் உடனிருந்தனர்.
போட்டியில் சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் இடம் திவ்யஸ்ரீ, இரண்டாம் இடம் தீபிகா, மூன்றாம் இடம் சிவபாரத், நான்காம் இடம் ஸ்ரீதர்ஷனி.
பெரியவர்களுக்கான போட்டியில் முதல் இடம் மதுமிதா, இரண்டாம் இடம் சந்தியா, மூன்றாம் இடம் பீரித்தி, நான்காம் இடம் அஷ்டலெட்சுமி, ஆகியவர்கள் சிறந்த மொழிநடை , குரல் ஏற்ற இறக்கம் ,கருத்துச் செறிவு, தன்னம்பிக்கையான பேச்சு ஆகியவற்றில் சிறந்து விளங்கியமையால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்