திருவள்ளூர் : பழவேற்காடு கடலில் குளித்த போது பெற்றோர் கண்முன்னே 16 வயது சிறுவன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான குவிந்த போதிலும், கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து யாரும் கடலில் இறங்காமல் காவல் துறையினரால் தடுக்கப்பட்டதால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல். இருந்தது.
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று செங்குன்றம் அடுத்த தீர்த்தங்க பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தமது குடும்பத்துடன் பழவேற்காடு லைட் ஹவுஸ் கடற்கரையில் சுற்றுலா வந்த போது கடலில் இறங்கி குளித்த போது அவரது 16 வயது மகன் திலக் பிரசன்னா, பெற்றோர் கண்முன்னே கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள் மாயமான அந்த சிறுவனை தேடி வருகின்றனர். இது குறித்து மீன்வளத்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பாலைவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் அலை சிக்கி மாயமான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு