பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத குழந்தைகளிடம் இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 30.08.2021-ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 18 வயது பூர்த்தி அடையாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் குழந்தைகளை பிடித்து அவர்களது பெற்றோர்களை தொடர்புகொண்டு நேரில் அழைத்து, இனிவரும் காலங்களில் தங்களது குழந்தைகளிடம் இரு சக்கர வாகனத்தையோ அல்லது நான்கு சக்கர வாகனத்தையோ கொடுத்து ஓட்டி செல்ல அனுமதிக்க கூடாது என கண்டிப்புடன் கூறியும், இனிவரும் காலங்களில் 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனங்களை ஓட்ட கூடாது என குழந்தைகளிடம் அன்புடன் அறிவுரை கூறியும் அனுப்பி வைத்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோபிநாத் அவர்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை