திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று (28.07.2021) இரவு தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய நிலையில் பதட்டமடைந்த பெற்றோர்கள் மாவட்ட அலுவலகத்திற்கு இரவு 23.30 மணிக்கு தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நள்ளிரவில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில்
தேடுதல் பணியில் ஈடுபட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் ரோந்து காவலர்கள் திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் வெளியூர் செல்ல திட்டமிட்டு திருவாரூர் புதிய பேருந்துநிலையம் அருகில் பதுங்கிய சிறுவன் சாய்ராமை அதிகாலை 03.00 மணியளவில் மீட்டு பெற்றோர்கள் வசம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்ட இரவு ரோந்து அதிகாரிகள்,காவலர்கள் மற்றும் திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்கள் பாராட்டினார்கள். மேலும் சிறுவனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்கள்.