திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.K.M.அஷ்வினி அவர்கள் மேற்பார்வையில், வெறையூர் காவல் ஆய்வாளர் திரு.S.செல்வநாயகம் அவர்கள் தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பெருமணம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் தலைமறைவு குற்றவாளிகளை காவல்துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.